வெள்ளவத்தையில் தமிழ் ஆசிரியை வெள்ளை வானில் கடத்தல்
வெள்ளவத்தையில் தமிழ் ஆசிரியை ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் நேற்று மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு இராஜகிரிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்பித்து வரும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரி (வயது 30) எனும் ஆசிரியையே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
நேற்று மாலை 4.30 மணியளவிலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பசல்ஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது வீட் டுக்கு வெள்ளை நிற வானில் வந்த ஆயுததாரிகள் குறித்த ஆசிரியையை பலவந்தமாக கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment