முல்லைத்தீவு யுத்த சூனிய பகுதியில் புலிகளின் ஊரடங்கு உத்தரவு; மீறிவோர் தண்டிக்கப்படுவரென கடுமையான எச்சரிக்கை அறிவிப்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனியப் பகுதியில் புலிகள் ஊரங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளனர்.
தமது ஊரடங்கு உத்தரவை மீறிச் செல்வோர் துரோகிகள் எனக் கருதப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவரென புலிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் எட்டுச் சடலங்கள், ரி-56 ரக துப்பாக்கிகள்- 34, ரொக்கடடுகள்-2, கிளோமோர்-2, ரிப்பீட்டர்கள்-6, ஏகே-47 ரக துப்பாக்கிகள்-3, பெங்களுர் டொபிடோ ரக குண்டுகள்-7, ஆகியவற்றினைக் கைப்பற்றினர்.
இவை தவிர பெருந்தொகை தொலைத்தொடர்பு சாதனங்களும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாகப் பாதுகாப்பக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment