வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட ஆசிரியை நேற்றிரவு வீட்டின் முன்பாக விடுவிப்பு
கொழும்பு, வெள்ளவத்தை பசல்ஸ் ஒழுங்கையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட ஆசிரியை நேற்று வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பசல்ஸ் ஒழுங்கையிலுள்ள தனது வீட்டிற்கு சிநேகிதியுடன் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வெள்ளை வானொன்றில் வந்தோர் இவரைக் கடத்திச் சென்றனர்.
இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியையான இவர் கடத்தப்பட்டது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசனிடமும் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்திலும் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் கடத்தல்காரர்கள் அதேவானில் இவரைக் கொண்டு வந்து பசல்ஸ் ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக உறவினர்கள் மனோகணேசன் எம்.பி.க்கு அறிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment