வன்னியில் இயக்க சீருடைகளுடன் வந்து தாக்குதல் நடத்தும் புலிகள்
மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தினரும் அவர்களுடைய தலைவர்களும் அண்மைக் காலங்களில் தமது புலிகள் இயக்கச் சீருடைகளை அணிந்து கொண்டே தாக்குதல்களுக்காக வருகின்றனர்.
தற்போது பொட்டம்மான், சூசை, சொர்ணம் போன்ற உயர்மட்டத் தலைவர்களே இராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல்களைத் தலைமை தாங்கி வரவேண்டிய தலைவர்களின் பற்றாக்குறை புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம் தற்போது பிரபாகரனும் அந்த உயர்மட்டத் தலைவர்களும் மட்டுமே தலைவர்கள் என்ற மட்டத்தில் எஞ்கியிருப்பதாகவும் அவ்வாறே தாக்குதல் அனுபவமும் திறமையும் வாய்ந்த புலிகள் இயக்க உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் உயிரிழந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொட்டம்மான், சூசை போன்ற வயதான தலைவர்களே தற்போது யுத்தத்திற்காக பதுங்குகுழிகளை விட்டு வெளியே வர வேண்டிய இறுதியான கட்டத்தில் புலிகள் இயக்கம் உள்ளது.
இவ்வாறு பழம் பெரும் தலைவர்கள் போர் முனைக்கு வரும் போது தமது புலிகள் இயக்க யுத்தச் சீருடைகளுடனேயே தலைமை தாங்கி வருகிறார்கள் எனவும் அவ்வாறே அவர்களின் படையணினரும் புலிகள் இயக்கச் சீருடைகளுடனே தாக்குதல்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத் தலைவர்கள் தமது போராட்டத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல்களைத் தாமே முன்னின்று நடத்த வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் பங்கு பற்றும் போர்முனை அவர்களின் இறுதிப் போர் முனையாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புடனேயே இவ்வாறு தலைவர்கள் தமது இயக்கத்தினதும் பதவியினதும் கௌரவத்தை எடுத்துக் காட்டும் யுத்த சீருடைகளை அணிந்து வருவதாக கருதப்படுகிறது.
இவ்வாறே அண்மையில் முறையான யுத்தச் சீருடைகளுடன் சூசை மற்றும் லோறன்ஸ் ஆகிய உயர்மட்டத் தலைவர்களின் தலைமையில் சுமார் 200 புலிகள் இயக்கத்தினர் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவத்தினருடன் மோதல்களில் ஈடுபட்டனர். இவர்கள் புதுமாத்தளன் பகுதியில் நிலை கொண்டிருந்த 55 ஆவது இராணுவப் படையணியினர் மீது தாமாக முன்வந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும் இவ்வாறு தாக்குதல்களை எதிர்பார்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியிருந்த இராணுவத்தினர் மேற்கொண்ட தீவிர பதில் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் சூசை, லோறன்ஸ் தமது அணியினருடன் பின்வாங்கி ஓடிப் போய்விட்டதாகவும் எவ்வாறாயினும் தாக்குதலுக்கு வந்த 200 புலிகள் இயக்கத்தினரில் 90 பேர் அப்பகுதியிலேயே கொல்லப்பட்டதாகவும் காயப்பட்டோர் உட்பட எஞ்சிய படையினருடன் சூசையும் லோறன்ஸும் காட்டுக்குள் பின்வாங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தப்பியோடிய போது ஒரு சில புலிகள் இயத்தினரை இராணுவத்தினர் பின்தொடர்ந்து வந்த காரணத்தால் தற்கொலை அங்கியிலுள்ள குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகவும் தெரிவந்துள்ளது.
தொடர்ந்து புலிகள் இயக்கத்தினரிடையே நடைபெற்ற செய்திப் பரிமாற்றங்களிலிருந்து படையினருக்குத் தெரிய வந்த தகவல்களுக்கேற்ப மேற்படி தாக்குதலுக்காக சூசை, லோறன்ஸ் தலைமையில் வந்த 200 புலிகள் இயக்கத்தினரில் சுமார் 50 புலிகள் தற்கொலைப் படையினர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறே புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் முன்னணித் தலைவராகிய ரத்தினம் மாஸ்ரர் தலைமையில் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரும் இறுதியில் பின்வாங்கித் தப்பியோடியுள்ளனர்.
மேற்படி இறுதிக் கட்டத் தாக்குதல்களில் புலிகள் இயக்கத் தலைவர்களும் அவர்களின் படையினரும் புலிகள் இயக்க யுத்தச் சீருடைகளுடனேயே வந்துள்ளனர்.
திவயின 06.03.2009.
0 விமர்சனங்கள்:
Post a Comment