மோதல்ப் பகுதியிலிருக்கும் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்ப்பு
மோதல் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதை தமது அமைப்பு எதிர்ப்பதாக இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கஸ்ரெல்லா தெரிவித்துள்ளார்.
மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டியது அவசியமெனக் கூறிய அவர், மோதல்ப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது அவசியமெனவும்; குறிப்பிட்டார். அத்துடன், வன்னி மக்கள் மோசமான சுகாதார சீர்கேட்டிற்கு உள்ளாகியிருப்பதாகவும், 3 தசாப்தகாலமாக இடம்பெற்றுவருகின்ற மோதல்களால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போல் கஸ்ரெல்லா சுட்டிக்காட்டினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment