வர்ஷாவுக்கு நடந்த விபரீதம்
வர்ஷாவுக்கு ஆறு வயதுதான் ஆகிறது.
கெட்டித்தனமான குழந்தை ஆயிரமாயிரம்கனவுகளோடு அந்தக் குழந்தையின் தாயார் இந்த வருடம் ஜனவரி மாதம் தான் அவளை முதலாம் வகுப்பில் சேர்த்திருந்தார்.
திருகோணமலை சென். மேரிஸ் பெண்கள் கல்லூரிதான் வர்ஷாவின் பாடசாலை.
அவள் மிகவும் கெட்டித்தனமும் சுறுசுறுப்பும் நிறைந்த குழந்தை என்று அவளின் ஆசிரியர் ஒருவரே தெரிவிக்கிறார். வாழ்க் கையை இன்னும் வாழவே ஆரம்பிக்காத அந்த பிஞ்சுக் குழந்தையை சிலர் கொன்று விட்டனர்.
இலங்கையின் ஏராளமான ஊடகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வர்ஷாதான் முன்பக்கச் செய்தி! கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமையன்று முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட அந்தக் குழந்தை இரண்டு நாள் கழித்து வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் வீதியோரம் உரப்பையொன்றினுள் சடலமாக மீட்கப்பட்டாள்.
வர்ஷாவை யார் கடத்தினார்கள்! ஏன் கடத் தினார்கள்? அந்தக் குழந்தையைக் கொலை செய்யுமளவுக்கு என்னதான் நடந்தது?
இவ்வாறான மர்மங்கள் நிறைந்த கேள்விகளோடு விசாரணைகளை ஆரம்பித்த திருகோணமலை பொலிஸாரின் வலையில் சிக்கினார்கள் ஆறு நபர்கள்.
பொலிஸிடம் அகப்பட்டுள்ள அந்த அறுவரில் ஒருவர் பெண் பொலிஸ் அதிகாரியொருவரின் மகன் எனத் தெரியவருகிறது. அவருக்கு வயது இருபதுக்குள்தான் இருக்கும்.
வர்ஷாவின் வகுப்பில் படிக்கும் குழந்தை கள் சொன்ன தகவலை வைத்தே மேற்படி நால்வரையும் தாம் கைது செய்துள்ளதாகச் சொல்கிறார் திருகோணமலை பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்த்தன!
இதில் அதிர்ச்சி தரும் விடயமென்ன வென்றால், இந்த ஈவிரக்கமற்ற கடத்தலின் சூத்திரதாரியாக பொலிஸாரால் சந்தேகிக்கப்படுபவர் ஒரு உயர்தர வகுப்பு மாணவர்.
இவர் கணனி கற்றுக்கொடுக்கும் வேலையும் பார்த்து வந்துள்ளார். வர்ஷாவையும் அவளின் குடும்பத்தையும் இவருக்கு நன்றாகத் தெரியும் என்று பொலிஸ் அத்தியட்சர் வாஸ் விபரம் தருகிறார்! சம்பவ தினம் அதாவது வர்ஷா கடத்தப்பட்ட புதன்கிழமையன்று சந்தேகநபர் வர்ஷாவின் பாடசாலையருகே ஆட்டோவொன்றில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் வர்ஷாவை சந்தித்து அவளின் தாய்க்குச் சுகமில்லையென்றும் தன்னுடன் ஆட்டோவில் வருமாறும் கூறி அந்தக் குழந்தையை அழைத்துச் சென்றிருக்கின்றார். அவருடன் செல்வதற்கு முன் வர்ஷா தன்னுடைய வகுப்பு பிள்ளைகளிடம் கொம்பியூட்டர் அங்கிளுடன் தான் வீட்டுக்குச் செல்வதாகக் கூறியிருக்கின்றாள் என்று பொலிஸார் கூறுகின்றார்கள்.
குழந்தையின் தொண்டை நெரிக்கப்பட்டிருக்கின்றது. கண்கள், கைகள் மற்றும் கால்கள் எல்லாம் இறுகக் கட்டப்பட்ட நிலையிலேயே வர்ஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சத்தமிடாதபடி பிள்ளையின் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. உடல் முழுக்க சூட்டுக் காயங்கள் வேறு. அந்தப் பட்டாம்பூச்சியை சடலமாகப் போட்டுக் கட்டியிருந்த உரப்பைக்குள்தான் அவளின் சீருடை மற்றும் பாடசாலைப் பை எல்லாம் கிடந்தன. இத்தனைக்கும் அந்த உரப்பை கண்டெடுக்கப்பட்ட புதிய சோனகத் தெருவானது திருகோணமலை நகரத்தின் இருதயம் போலான பகுதி.
வர்ஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட வெள்ளிக்கிழமையன்று அவளின் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எல்லோரும் வர்ஷாவின் கடத்தலைக் கண்டித்தும் அவளை விடுதலை செய்யுமாறும் கோரியும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினார்கள். அப்போது நேரம் காலை 11.00 மணி. ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். வர்ஷாவின் பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம். பவளராணிக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. அவர் பேசியிருக்கின்றார். உரப்பையொன்றினுள் சிறுமியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கின்றது.
அது வர்ஷாவின் சடலம் தான்.
அதிபர் அருட்சகோதரி பவளராணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது அவர் பக்ஸ் மூலம் அனுப்புவதற்காக கடிதமொன்றை தயார் செய்துகொண்டிருந்தார்.
அவர் வர்ஷாவை விடுவிப்பது தொடர்பில் உடனடிக் கவனம் எடுக்குமாறு ஜனாதிபதி, கல்வியமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளையெல்லாம் கோரும் கடிதம் அது! வர்ஷா கடத்தப்பட்ட புதன்கிழமை காலை 11.45 மணிக்கெல்லாம் அவளுக்கு பாடசாலை முடிந்து விட்டது. வர்ஷா அவள் நண்பிகளுடன் பாடசாலை வராந்தாவில் தனது ஆட்டோவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நாளும் அவளை பாடசாலைக்கு அழைத்து வருவதும் பாட சாலையிலிருந்து வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுவதும் ஒரே ஆட்டோக்காரர்தான்.
பாலையூற்றிலுள்ள பூம்புகாரில் வர்ஷாவின் வீடு இருக்கிறது. இது திருகோணமலை நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரமானது. வர்ஷா அம்மாவுடன்தான் வசித்து வந்தாள். அப்பா மத்தியகிழக்கு நாடொன் றில் தொழில் செய்கிறார்.
வர்ஷா கடத்தப்பட்ட விதம் பற்றி பாடசாலைத் தரப்பினர் சிலர் இப்படிச் சொல்கின்றார்கள். பாடசாலைக்கு முன்பாக ஆட்டோ வண்டியொன்று வந்து நின்றது.
அதற்குள்ளிருந்து கறுப்புச் சட்டையணிந்த ஆணொருவர் இறங்கினார்.
அவர் வர்ஷாவிடம் அவளின் தாயாருக்கு சுகமில்லை என்று சொல்லி வண்டிக்குள் ஏறுமாறு கூறினார்.
பிறகு வர்ஷா ஆட்டோவுக்குள் துள்ளி ஏறிக் கொண்டாள்.
ஆட்டோ சென்று விட்டது.
வர்ஷா சென்று சற்று நேரத்திற்கெல்லாம், அவளை வழமை யாக ஏற்றிச் செல்லும் ஆட்டோ வந்திருக்கி றது. குழந்தை அங்கில்லாததை கண்டதும் ஆட்டோக்காரர் விசாரித்திருக்கின்றார். வர் ஷாவின் தாய்க்கு சுகமில்லையென்று கூறி அவளை வேறொரு ஆட்டோவில் அழைத் துச் சென்ற விடயத்தை அங்கிருந்தவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். உடனே ஆட்டோ சாரதி வர்ஷாவின் அம்மாவை தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல அம்மா பாடசாலைக்கே வந்து விட் டார். அப்போது நேரம் பிற்பகல் 1.00 மணி.
சற்று நேரத்துக்குள் குழந்தை வர்ஷா கடத் தப்பட்ட செய்தி திருகோணமல நகர் முழுக்க பரவி விட்டது. அவளைக் கடத்தியவர்கள் 3 கோடி ரூபாவைக் கப்பமாகக் கேட்டதாகத் தெரியவருகிறது.
வர்ஷா கெட்டிக்காரப்பிள்ளை, இருந்தா லும் பாடசாலைக்கு வரும்போது அழுது கொண்டுதான் வருவாள்.
ஆனால் அவளின் கடைசி நாளன்று ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் அவள் மிகவும் சந்தோசமாக இருந்தாள்.
மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் எங்களை நிரப்பி விட்டாள் என்கிறார் வர்ஷாவின் வகுப்பாசிரியையான திருமதி தனபாலன்.
வர்ஷாவின் அப்பா ஒரு மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து ஊர்வந்த போது பாடசாலைக்கு வந்திருந் தார். வர்ஷா இனி அழவே மாட்டாள் என்று அவர் எம்மிடம் உறுதியாகச் சொன்னார்.
ஆனால் எங்களையெல்லாம் விட்டு வர்ஷா இப்போது பிரிந்து விட்டாள். அவளுக்காக நாங்கள் அழுகிறோம் என்று கண் கசிந்தார் வர்ஷாவின் ஆசிரியை! வர்ஷாவின் கடத்தல், கொலை மற்றும் கப்பம் கோரிய விடயங்களுடன் மேற் சொல்லப்பட்ட நபர்கள் மட்டும்தான் சம்பந் தப்பட்டுள்ளார்களா? அல்லது வேறும் பலரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக பொலிஸார் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இனி என்னதான் நடந்தாலும் வர்ஷா மட்டும் வரவே மாட்டாள் என்பது எத்தனை துயரமான செய்தி!
குறிப்பு: சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக் கிய நாடுகள் சமவாயத்தின் உறுப்புரை 35 பின்வருமாறு கூறுகின்றது:
பிள்ளைகளை விற்றல், பரிவர்த்தனை செய்தல், கடத்தல் போன்றவற்றை தடுப்ப தற்கு அரசு சகல விதத்திலும் முயலுதல் வேண்டும்.
சட்டங்களெல்லாம் எழுத்துக்களில் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.
இருந்தாலும் வர்ஷாக்களை எமது தாய்மார் கள் இழந்துகொண்டேயிருக்கிறார்கள்!!
0 விமர்சனங்கள்:
Post a Comment