ராஜீவ்காந்தியின் கொலைக்கு LTTE வருந்துகிறதா என்று கேட்ட கேள்விக்கு நடேசன் பதில் அளிக்கவில்லை.
பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். எங்களுடன்தான் இருக்கிறார். போரை முன்னின்று நடத்தி வருகிறார் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் CNN-IBN தொலைக்காட்சிக்கு மின் அஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கேள்வி: வன்னிப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் தப்ப முடியாமல் நீங்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளதே…?
நடேசன்: முதலில் சிக்கியுள்ள என்ற வார்த்தையே தவறானதாகும். இது எங்களது மக்களின் நிலம். காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக இங்கு அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களது நிலங்களை விட்டு, வீடுகளை விட்டு இலங்கை அரசு விரட்டியடிக்கும் வரை அங்குதான் வசித்து வந்தனர். அவர்கள் சிக்கித் தவிக்கவில்லை, மாட்டிக் கொள்ளவில்லை.
தங்களுக்கு மீண்டும் கவுரவத்துடன் தங்களது நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.
கேள்வி: பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறார்?
நடேசன்: நீங்கள் சொன்னது போல எங்களது தலைவர் குறித்து நிறைய வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எங்களது தலைவர், எங்களது மக்களுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.
கேள்வி: இனப்போரில், இந்தியாவின் நிலையை மாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
நடேசன்: இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அப்படிச் செய்யும் உத்தேசமும், எங்களிடம் இல்லை. இந்தியாவை நாங்கள் எதிரியாகவே பார்க்கவில்லை.
இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பும், பலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பின்னிப் பிணைந்தது.
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பாரா, அப்படிப்பட்ட விருப்பம் அவரிடம் உள்ளதா?
நடேசன்: எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் இருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தியதாக இருந்தால் நிச்சயம் பேசத் தயார். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. இந்தியா எங்களது நண்பர். எங்கள் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.
கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, தங்களது உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்களா?
நடேசன்: உள்ளூர் அரசியல் நிலவரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். இதுகுறித்து கருத்து கூற முடியாது.
இருப்பினும், தமிழக மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஒருமித்த ஆதரவை ஈழத் தமிழர்கள் முழுமையாக பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் இன்றைய பெரும் பலமே, தமிழக மக்களின் பேராதரவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உறுதியான ஆதரவும்தான் என்று கூறியுள்ளார் நடேசன்.
கேள்வி: ராஜீவ்காந்தியை கொலைசெய்யாமல் விட்டிருந்தால் இந்தியா தமிழ் ஈழம் விடயத்தில் தனது ஆதரவை வழங்கியிருக்கும் என்று LTTE உணருகிறதா?
ராஜீவ்காந்தியின் கொலைக்கு LTTE வருந்துகிறதா?
இதற்கு நடேசன் பதில் அளிக்கவில்லை.
Prabhakaran is alive, leading war in SL: LTTE
CNN-IBN
Prabhakaran is alive and leading the war in Sri Lanka – the LTTE's political wing chief Nadesan tells CNN-IBN in an exclusive e-mail interview. He also says the LTTE doesn’t consider India its enemy.
CNN-IBN: How do you respond to Sri Lanka government's claim that the LTTE is blocking a safe passage for civilians trapped in your areas?
Nadesan: First of all, it is not appropriate to use the word "trapped." It is these people's land, where they have been living for generations until the Sri Lankan government chased them out of their homes. They are not trapped; they are still struggling to get their life back in their land with dignity.
CNN-IBN: Where is Prabhakaran at the moment?
Nadesan: As you said, yes, there are rumours and speculations. But I can confirm that our leader is here with our people as always.
CNN-IBN: What do you think the LTTE can do to change India's stand on the conflict?
Nadesan: We have neither ever committed any act against India's interests nor have any intentions to do so. The source of strength and security for India's southern flank is intertwined with the political stability and security of Eelam Tamils.
CNN-IBN: Would the LTTE chief be willing to meet Indian government officials and hold talks with them?
Nadesan: If the talks are without preconditions and towards the political aspirations of Eelam Tamils. India is the super power of this region; India is our friend. We always want India to get involved and be on our side.
CNN-IBN: Does the LTTE feel that politicians in Tamil Nadu are using the Eelam Tamil issue for domestic political gains?
Nadesan: It is obvious that all political parties have their differences of policies regarding domestic affairs; it wouldn't be appropriate for me to comment on that. However, the Eelam Tamils sincerely appreciate the solidarity of all the people of Tamil Nadu. The strength of Eelam Tamils today is the support of the people of Tamil Nadu and the entire Tamil diaspora.
Nadesan declined to answer this question:
CNN-IBN: Does the LTTE feel that had it not been for the Rajiv Gandhi assassination, India would have supported the Eelam Tamil cause? Does the LTTE regret the Rajiv Gandhi assassination?
0 விமர்சனங்கள்:
Post a Comment