கன்னத்தில் துப்பாக்கி ரவை இருப்பதை 12 வருட காலமாக அறியாதிருந்த பெண்மணி
தனது கன்னத்தில் துப்பாக்கி ரவையொன்று துளைத்து உள்நுழைந்திருப்பதை 12 வருட கா லமாக பெண்மணி ஒருவர் அறியாதிருந்த அதிசய சம்பவம் அல்பேனியாவில் இடம்பெற்றுள்ளது.
1997 ஆம் ஆண்டு அல்பேனியாவில் உள்நாட்டு மோதலொன்று இடம்பெற்ற சமயம், மிரிக் றுகாஜ் (Mrike Rrucaj) என்ற மேற்படி பெண்மணி படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
அச்சமயம் வீட்டு ஜன்னலினூடாக சீறிப் பாய்ந்து வந்த துப்பாக்கி ரவை மி?க்கின் கன்னத்தை பதம் பார்த்துள்ளது.
இதனையடுத்து கன்னத்தில் குருதி பெருக்கெடுத்தோட மிரிக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கி ரவை அவரது கன்னத்தை துளைத்து வெளியேறிவிட்டதாக கூறி அவரது காயத்திற்கு மருந்திட்டனர்.
அதன் பின் காயம் ஆறவும், தனது கன்னத்தில் குண்டொன்று இருப்பதை அறியாமல் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
இந் நிலையில் ஒரு வாரத்திற்கு முன் மிரிக்கிற்கு (தற்போது 40 வயது) கன்னத்தில் கடுமையான வலி ஏற்பட்டது.
அவரது வலிக்கான காரணத்தை அறிவதற்காக மருத்துவர்கள் அவரது முகத்தை "எக்ஸ்ரே' படம் எடுத்த போதுதான், 2.8 சென்ரிமீற்றர் நீளமான துப்பாக்கி ரவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு அல்பேனியாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் சுமார் 3000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment