மகனுக்கு தினசரி 49 தொலைபேசி அழைப்புகள்
இரண்டரை வருட காலத்தில் தினசரி 49 தடவைகள் வீதம் தனது மகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தொந்தரவு செய்தமைக்காக (73 வயது) ஆஸ்திரிய பெண்மணி ஒருவருக்கு 478 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை தண்டப் பணமாக செலுத்த அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.
தனது தாய் தனக்கு தொலைபேசி மூலமாக தொந்தரவு கொடுப்பதாக மகன் செய்த புகாரையடுத்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பையடுத்து பெண்மணி விபரிக்கையில்,""நான் எனது மகனுடன் உரையாட மட்டுமே விரும்பினேன். எனது மகனும் மருமகளும் என்னுடன் பேசுவதை தவிர்த்தார்கள். எனது பேரப்பிள்ளையைக் கூட (15 வயது) நான் இதுவரை ஒரு போதும் பார்த்ததில்லை'' என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment