இப்போதைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதுதான் - ஐ.நா. மனிதாபிமான அதிகாரி ஹோம்ஸ்
இலங்கையின் வடக்கே நிலவும் இப்போதைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான்.
இவ்வாறு கூறியிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்.
இலங்கை நெருக்கடி குறித்து பி.பி.ஸி யின் ஆங்கில சேவைக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இது குறித்துத்தெரிவித்ததாவது:
மனித நேயப்போர் நிறுத்தம் அல்லது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரு தற்காலிக நிறுத்தம் என்பது நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போதைய இராணுவச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, பொதுமக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் கடைசி கேடயம் என்று தோன்றுகிறது தான் ஓர் இராணுவ ஆய்வாளர் இல்லை. என்ற போதிலும், அங்குள்ள சூழல் புலிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றவில்லை. இதற்கு ஒரே தீர்வு புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான்.
மேலும் தாக்குதல் இடைநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயன்ற ஆறு பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர் எனத் தெரியவந்திருக்கிறது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment