ஆயுதங்களைக் கைவிட்டாலே புலிகளுடன் போர்நிறுத்தம் அதுவரை இணங்கமுடியாது என அரசு நிராகரிப்பு.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே அவர்களுடன் போர் நிறுத்தம் செய்யமுடியும்.
புலிகள் தமது ஆயுதங்களைக்களைந்த பின்னர் மட்டுமே அவர்களுடன் பேச முடியும். காலத்தை வாங்கித்தாம் மீண்டும் பலம் அடைவதனை நோக்கமாகக்கொண்டு அவர்கள் அரசியல் தீர்வு குறித்து பேசுவதற்கு இணங்கமுடியாது; இடமளிக்க இயலாது.
பேச்சுவார்த்தைக்கு அடித்தளத்தைக் கொண்டிருக்கும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய போர் நிறுத்தத்துக்கு தாம் தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த அழைப்பை அரசாங்கம் உடனடியாகவே, திட்டவட்டமாகவே மேற்கண்டவாறு தெரிவித்து நிராகரித்து விட்டது.
நேற்றுக் கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தனா அரசின் மேற்கண்ட முடிவை அறிவித்தார்.
பிரச்சினையில் சரித்திரத்தைக் கவனத்தில் கொண்டால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடும் வரையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அரசாங்கத்தினால் இணங்க முடியாது
விடுதலைப் புலிகளுக்கு மூச்சு விடுவதற்கும், படையினரின் முற்றுகைக்குள் அகப்பட்டுள்ள அவர்களுடைய தலைவர்கள் வெளியே தப்பிச் செல்வதற்கும் நேரம் தேவையாக இருக்கின்றது அதனாலேயே நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் கோருகின்றார்கள் என்று அவர் கூறினார்.விடுதலைப் புலிகளின் அறிவிப்பு குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன்ன தெரிவித்ததாவது:
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கக்கூடிய நிலையில் இப்போது இல்லை.
"புலிகள் இப்போது தோற்றுவிட்டார்கள். ஈழம் என்ற மாயையும் கலைந்துவிட்டது. புலிகள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது மக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தமது ஆயுதங்களை அவர்கள் கீழே போட வேண்டும் அவ்வளவுதான். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை பலவந்தமாக பிடித்து வைத்திருக்கிÙர்கள் அவர்களை புலிகள் விடுவிக்க வேண்டும். எவரையும் பலவந்தமாக தடுத்து வைப்பது ஒரு குற்றச் செயல் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment