முல்லைக் கடலில் கடற்படை, கரும்புலிகள் சமர்: கருணா, பரத் பலி: விமான எதிர்ப்பு ஏவுகணை மீட்பு
முல்லைத்தீவு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை வள்ளங்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் (15) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு தற்கொலை வள்ளங்களை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டனர். சம்பவத்தில் ஒரு வள்ளம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் கடலில் மூழ்கியது. மேலுமொரு வள்ளம் கைப்பற்றப்பட்டது. இந்த வள்ளத்திலிருந்து கடற்புலிகளின் முக்கியஸ்தர்களின் இரு சடலங்கள் உட்பட பத்துச் சடலங்களைக் கடற்படையினர் கைப்பற்றியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்புலிகளின் முக்கிஸ்தர்களான லெப்டினன்ட் கேர்ணல் கருணா,பாரத் ஆகியோரின் சடலங்களே இவையென அடையாளம் காணப்பட்டன. 12.7 மி.மீட்டரைக் கொண்ட விமான அழிப்பு ஏவுகணை,எம்.பி.என்.ஜி ரக ஆயுதங்கள்,வெடிபொருட்கள் போன்றனவும் இந்தப் படகிலிருந்து மீட்கப்பட்டன. இரண்டாவது படகினைக் கைப்பற்றும் முயற்சியின்போது இரு தரப்புக்குமிடையே பாரிய மோதல் ஏற்றபட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment