3000 பொதுமக்கள் இன்று படையினரிடம் தஞ்சம் (பட இணைப்பு)
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து மேலும் 3000 பொதுமக்களை இராணுவத்தின் 58 படையணி இன்று காலை மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயங்களான புதுமாத்தளன் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இராணுவத்தினர் படை நடவடிக்கை தொடர்வதாகவும் பல பகுதியினை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
அதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து நேற்றைய தினம் 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் விடுத்த 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment