300க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களும், 17 சடலங்களும் வவுனியா வைத்தியசாலைக்கு வருகை எனத் தகவல்
பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து 49 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, வவுனியா வைத்தியசாலைக்கு 300க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் வந்து சேர்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இறந்த பொதுமக்களின் 17 சடலங்களும் வவுனியா வைத்தியாசலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இறந்தவர்களில் 9 பேர் ஆண்கள் என்றும் 8 பேர் பெண்கள் என்றும், இவர்கள் எவருமே அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு தொடக்கம் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், இன்றும் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வைத்தியசாலை பகுதியில் பொலிஸ்-இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வைத்தியசாலை முன் பக்கத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வீதியில் வாகன போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment