இலங்கையில் இடம்பெறும் மனித அவலங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்- கனேடிய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெறுகின்ற மனித அவலங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு முதலில் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் அவசியமாகும். என்று கனடா வலியுறுத்தியுள்ளது.
கனடா வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனோன் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் துரிதமான தீர்மானம் ஒன்றிற்காக செயற்படுவதுடன் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. மனித அவலங்களுக்கு துரித தீர்வொன்று காணப்படுமென்று அனைத்து கனேடியர்களும் நம்புகின்றனர்.
இதன் முதல் நடவடிக்கையாக இலங்கையில் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் அவசியமாகும். அதனை கனடா வலியுறுத்தியுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்கள் சுதந்திரமாகவும் சுயமாகவும் நடமாடுவதற்கு இரண்டு தரப்பினரும், அனுமதிக்க வேண்டும். உதவியை எதிர்பார்த்திருக்கும் மக்களிடம் மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்புடனும் தடையின்றியும் செல்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை புலிகள் தடுப்பதை நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இலங்கையின் சமாதானத்திற்கான நகர்வுகள் குறித்து எமது நாடு தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிடும். கவனத்தில் கொள்ள வேண்டிய மனிதாபிமõன விடயங்கள் குறித்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் கிலாரி கிளின்டன், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஏஞ்சலா பொக்தான் ஆகி÷ யாருடன் நான் கலந்துரையாடியுள்ளேன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment