பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கி.மீ அருகில் 58வது படையணி
பாதுகாப்பு வலயத்தில் பிரபாகரன் இன்னும் இருப்பதாக படையினர் தெரிவிக்கின்றனர். வலைஞர் மடம் பகுதியை விடுவித்த இராணுவத்தின் 55வது, 58வது படையணிகள் தொடர்ந்து கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சூசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பங்கருக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆகாய படையின் ஆளில்லா விமானம் விடுவிக்கப்படாத பகுதியை மிக நுணுக்கமாக அவதானித்து வருகிறது. அதேவேளை கடல் படையினரும் வலைஞர் மடத்தில் இருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள 7 கி.மீ கடற் பிராந்தியத்தை இடைவிடாது கண்காணித்து வருகின்றனர்.
பிரபாகரனின் மறைவிடத்தில் இருந்து 3.5கி.மீ அருகில் 58வது படையணி நெருங்கியுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment