சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம்
புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கும் கட் டத்தில் இருக்கின்ற இன்றைய சூழ் நிலையில் புலிகள் பாரிய அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடும். எனி னும், அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். சிங் களதமிழ் புத்தாண்டு பிறந்து குயில் கூவும்வேளையில் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்ட செய்தி வெளிவரும் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்நாட்டில் பல தசாப்தங்களாக புரையோடிப்போயுள்ள இந்த பயங்கரவாதப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெறும் தருணம் தற்போது நெருங்கி வந்துள்ளது. பயங்கரவாதிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புலிகளின் நிழல்கள் சிற்சில இடங்களில் தெரிகின்றன. அவற்றை ஒழித்துக்கட்டி நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவோம்.
புதுவருடம் பிறந்து குயில் கூவும் வேளையில் இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்ட செய்தி வெளிவரும்.
பஞ்சாயுதத்தை கட்டவேண்டிய குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டியவரே பிரபாகரன். அவரிடம் இருக்கின்ற தர்மமானது படுகொலை செய்வது மட்டும்தான். நாம் இப்போது புலிகளை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாதத்தின் சகல சக்திகளும் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. அத்து டன் புலிகளின் பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது புலிகள் கானல் நீரையே தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பெரிய புலியின் குட்டி கூட காயமடைந்துள்ளது.
பயங்கரவாத புலிகள் தற்போது பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியில் மறைந்திருந்து படையினர் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இது சர்வதேச போர் விதி?றைகளை மீறுகின்ற செயலாகும்.
ஆனால், எமது படையினர் மனித நேயத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் தாய் நாட்டைக் காப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்கின்றனர்.
பயங்கரவாதிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் அவர்கள் பா?ய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடலாம். ஆனால், அவற்றை எதிர்கொள்ளக்கூடிய வகையில் நாம் தயாராகவே உள்ளோம்.
புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை விட பொய்ப்பிரசார நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் வேரோடு அழிக்கப்படுவதாக சில வெளிநாட்டு சக்திகள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நாட்டில் எங்கே எப்படி நடை பெறுகின்றது எனக் கேட்கிறேன். இத்தகைய பிரசாரமானது எமது நாட்டின் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டாகும்.
வடக்கில் உள்ள மக்களுக்கு அனுப்பப்படும் நிவாரணங்களை அவர்களுக்கு கொடுக்க விடாது புலிகள் தாக்குகின்றனர்.
உணவுக் கப்பல்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும் புலிகள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கப்போகின்றனர்.
பிரபாகரனின் மனதுக்குக் கூட விடுதலை கிடைக்கப் போவதில்லை.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும்போது அதனைத் தடுப்பதற்கு சில சக்திகள் முயல்கின்றன. இந்த அமைப்புக்கு புலிகளின் ஆதரவாளர்களே அனுசரணையாக செயல்படுகின்றனர்.
யுத்தம் நடைபெறுகின்ற அதேவேளை அபிவிருத்திகளையும் மேற்கொள்வது அவசியம். மூன்று தசாப்தங்களாக பின்னோக்கிச் சென்ற அபிவிருத்தியை இரண்டு மூன்று மடங்கு முன்னோக்கிச் செல்ல வைக்க வேண்டியது அவசியம்.
எமது நாட்டின் அபிவிருத்திக்கு ஏனையோ?ன் உதவியும் தேவை. எனவே, இதற்கு தடையாக யாரும் இருக்க வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல ஒத்துழையுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
வீரகேசரி






0 விமர்சனங்கள்:
Post a Comment