இளம் தம்பதியின் உயிரை காப்பாற்றிய முயல்
சமையலறையில் எரிவாயு கசிவதை அறி யாது தம்மை மறந்து உறங்கிக்கொண்டிருந்த தம்பதியின் உயிரை வளர்ப்பு முயலொன்று காப்பாற்றிய அதிசய சம்பவம், பிரித்தானியாவிலுள்ள தட்சாம் எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ தினம் நள்ளிரவு வழமைக்கு மாறான வகையில் தமது படுக்கையறையின் கதவின் பிடியை எவரோ தட்டும் சத்தம் கேட்டு தானும் தனது மனைவி கேசி லெதரும் கதவைத் திறந்ததாகவும், வெளியே தமது வளர்ப்பு முயலான பன்னி நின்று கொண்டிருப்பதைக் கண்டு திகைத்ததாக வும் இளம் கணவரான வரென் டெய்லர் தெரிவித்தார்.
முயலே குறித்த கதவுக் குமிழைத் தட்டியுள்ளது என் பதை தாம் கிரகிக் கும் முன்பு, வெளி யே நிறைந்திருந்த எரிவாயுவின் மணம் தமது நாசி யை தாக்கியதாக அவர் கூறினார்.
முயல் மட்டும் தக்க தருணத்தில் எச்சரிக்கை செய் யத் தவறியிருந் தால் பெரும் தீ விபத்து அனர்த்தத்தில் மேற் படி தம்பதி சிக்கிக்கொள்ள நேரிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment