சதாம் ஹுசைனின் படுக்கையில் முதலிரவை கழிக்க புதுமணத் தம்பதிகளுக்கு வாய்ப்பு

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் படுக்கையில் முதலிரவைக் கழிக்க விரும்பும் புதுமணத் தம்பதிகள், ஒரு இரவுக்கு 150 ஸ்ரேலிங் பவுண் செலுத்தி அந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஈராக்கிய சுற்றுலா அமைச்சின் பேச்சாளர் அப்துல் சஹ்ரா அல் தெலகனி, பிரித்தானிய "த சண்டே டைம்ஸ்' பத் திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே, இது தொடர்பான தகவல்களைத் தெ?வித்தார்.
தலைநகர் பக்தாத்திலிருந்து தெற்கே 60 மைல் தொலைவில் ஹில்லா நகரிலுள்ள சதாம் ஹுசைனின் மாளிகையிலேயே மேற் படி படுக்கையறை அமைந்துள்ளது.
2003 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதாம் ஹுசைன், 2006 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் அவரது படுக்கையறையில் தேனிலவைக் கழிக்க வாய்ப்பளிக்கப்பட்டமையானது, பெருமளவான உல்லாசப் பிரயாணிகளை ஈராக்கை நோக்கி கவர்ந்திழுக்க வழிவகை செய்யும் எனத் தான் நம்புவதாக அப்துல் சஹ்ரா தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment