பேச்சுவார்த்தைக்கான இந்திய அரசின் அழைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் விடுத்திருந்த அழைப்பினை கட்சி நிராகரித்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய சந்தர்ப்பத்தில் தீர்வு காணக் கூடிய வழிவகைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கத் தவறிய இந்திய அரசாங்கம் தற்போது தேர்தலை மையமாக வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதாகவும் இது இந்திய அரசின் அரசியல் லாபம் தேடும் ஒரு தந்திரோபாயமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் நேற்றுக் (09) கூடிய தேசிய கூட்டமைப்பு எம்பிக்களே இந்த அழைப்பை நிராகரிப்பதென முடிவு செய்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment