விற்பனை நிலையத்தில் பலரின் முன்னிலையில் மகனைச் சுட்டுக்கொன்ற தாய் தானும் தற்கொலை

விற்பனை நிலையமொன்றில் பலரின் முன்னிலையில் தாயொருவர் தனது மகனைச் சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கஸ்ஸெல்பெரி எனும் இடத்திலமைந்த மேற்படி விற்பனை நிலையத்தில் தன்னியக்க வீடியோ கண்காணிப்பு கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கையில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேரி மூரி (44 வயது) என்ற மேற்படி பெண்மணி, தனது மகனான மிட்செல் மூரியின் (20 வயது) தலையின் பின்புறத்தைத் துப்பாக்கியால் குறிபார்ப்பதும் மிட்செல் சுடப்பட்டு விழுந்து கிடப்பதும் விற்பனை நிலையத்திலுள்ள கண்காணிப்பு வீடியோ கருவிகளில் பதிவாகியுள்ளன.
மேரி மூரி தனது காதலருக்கும் அதிகாரிகளுக்கும் ஒலிநாடா செய்தியொன்றையும்தற்கொலை குறிப்பொன்றையும் விட்டுச் சென்றுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் பல தடவைகள் மன்னிப்புக் கோரியிருந்ததுடன் ""நான் எனது மகனை சொர்க்கத்துக்கு அனுப்புவதுடன் என்னை நானே நரகத்துக்கு அனுப்புகிறேன்'' என்ற வாசகம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருந்தது.
வணிக நடவடிக்கைகள் நடைபெறும் இந்த இடத்தில் இக்காரியத்தைச் செய்வதற்காக மன்னிப்பு கோருகிறேன். எனினும்நான் எனது மகனைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. கடவுள் என்னை ஒரு மகாராணியாக உருவாக்கினார். நான் தோல்வியடைந்து விட்டேன். நான் எனது நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்த தேவதையாக உள்ளேன். கடவுள் என்னை கிறிஸ்துவுக்கு எதிரானவராக மாற்றிவிட்டார்'' என தனது தற்கொலைக் கடிதத்தில் மேரி தெரிவித்துள்ளார்.
முதலில் தான் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும் எனினும் தனது மகனைக் காப்பாற்றவேண்டியிருந்தமையால் அவரையும் சுட்டுக் கொல்ல நேர்ந்ததாகவும் அக்கடிதத்தில் மேலும் மேரி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மிட்செலின் தந்தையான சாள்ஸ் மூரி விபரிக்கையில், மேரி ஏற்கனவே மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் 2002 ஆம் ஆண்டில் தற்கொலை செய்ய முயற்சித்ததையடுத்து, மாநில சட்டத்தின் பிரகாரம் மனநல மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மிட்செல் மூரி தனது காதலியுடன் தனியாக வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment