ஆயுதக்களைவு மற்றும் சரணடைவது குறித்து புலிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன : அமெரிக்கா
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
ஆயுத களைவு மற்றும் சரணடைவது குறித்து விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணேவிற்கும், ரிச்சர்ட் பௌச்சருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த மேலதிக பணியாளர்களை ஈடுபடுத்தி சிவிலியன் நலன்களை உறுதிப்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 500 விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாகவும், சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலித கொஹணே இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளையில் தற்போது 646 பேர் கடயைமாற்றி வருவதாகவும், மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியதன் அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment