பிரபாகரனை தீவிரவாதியென சொல்வது போல்தான் பகத்சிங், சுபாஸ் சந்திரபோஷையும் முன்னர் கூறினர்
பிரபாகரனை தீவிரவாதி என்று சொல்கிறார்கள். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பகத்சிங், சுபாஷ் சந்திரபோஷைக்கூட தீவிரவாதி என்றுதான் கூறினார்கள். விடுதலைக்காக போராடுபவர்களை அப்படிக் கூறுவது வழமையானது என பா.ம.க. நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முகமது அலி ஜின்னா, வட சென்னையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தா.பாண்டியன் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவநர் ராமதாஸ் பேசுகையில் மேலும் கூறியதாவது;
இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கைத் தமிழர்களை தாக்குகிறார்கள். தமிழர்களை வேகமாக தாக்குங்கள் என்று சொல்வதற்காகத்தான் இந்திய அமைச்சரும் அதிகாரிகளும் இலங்கைக்குச் சென்றிருக்கின்றனர்.
ஏழைகளை ஒழித்துவிட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் ராஜபக்ஷ யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது போல் பலமுறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டு காலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.
பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோஷை அப்படித்தான் சொன்னார்கள்.விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment