குழந்தையின் கைவடிவில் மீன் சினை ஏறாவூரில் மக்கள் முண்டியடித்து பார்வை
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் வீடொன்றில் மீனொன்றை வெட்டியபோது குழந்தையொன்றின் கை வடிவில் "" மீன் சினை' யொன்று காணப்படுவது இப்பகுதி மக்களை பெரும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.
கைக்குழந்தையொன்று தனது வலது கையின் ஐந்து விரல்களையும் நிமிர்த்திப் பிடித்துள்ளதைப் போன்று இந்த சினையின் தோற்றம் காணப்படுவதால் தினமும் பெரும் எண்ணிக்கையான மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றனர்.
ஏறாவூர் சந்தையிலிருந்து வாங்கிவரப்பட்ட பாரை மீனொன்றினை வெட்டிக் கறி சமைப்பதற்கு தயாரான போதே இச் சினைமுட்டை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 100 கிராமிற்கும் சற்று குறைவான அளவையுடைய இந்த மீன் சினை மஞ்சள் நிறமாயுள்ளது. தினமும் குளிரூட்டியில் வைக்கப்பட்டு இது பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
பொதுமக்களுடன் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் இந்த அதிசய மீன் சினையை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment