அடகு நகையை பெற வங்கிக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
அம்பாறையில் வங்கியொன்றில் அடகு நகை வாங்குவதற்காக சனிக்கிழமை சென்ற இளைஞனொருவர் நேற்றுக்காலை பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருடன் சென்ற மற்றொருவர் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறையில் அரச வங்கியொன்றில் சனிக்கிழமை அடகு நகைகள் ஏலத்தில் விற்கப்பட்டன. அவற்றை வாங்குவதற்காக கல்முனை 12 அலியார் வீதியிலிருந்து சுலைமான் லெப்பை செய்தூன் ஆப்தீன் (வயது 28) என்பவர் மற்றொருவருடன் 6 லட்சம் ரூபா பணத்துடன் அம்பாறைக்குச் சென்றுள்ளார்.
இவரது சடலம், பலத்த வெட்டுக்காயங்களுடன் நேற்றுக்காலை 6 மணியளவில் நிந்தவூர் அல்லிமுல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் கொண்டு சென்ற பணத்துக்கு என்ன நடந்ததெனத் தெரியாததுடன் இவருடன் சென்றவரும் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment