புலிகள் மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதை மன்னிக்க முடியாது : பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர்
இலங்கை மோதல்களில் பொதுமக்கள் சிக்குண்டிருப்பது தொடர்பாக ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட், புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதை மன்னிக்க முடியாது என்பதை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வலயம் தவிர எஞ்சிய பகுதிகளை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்துக்குள் அவர்கள் நுழையப்போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாம் பெரும் கவலையடைகிறோம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதநேயத்துக்கான போர்நிறுத்தத்தின் உடனடித் தேவை தற்பொழுது வலுவடைந்துள்ளது. போர்நிறுத்தம் செய்யப்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல முடியும் எனவும் இலங்கை அரசாங்கமும் புலிகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் எனவும் மிலிபான்ட் குறிப்பிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment