கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம், அங்கே அல்லற்படும் மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்த சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாநிலைப் போராட்டம் 11 நாட்களுக்குப் பின்னர் நேற்று முற்பகல் 11:30 நிமிடத்துக்கு முடிவுக்கு வந்தது.
சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பிரான்சிஸ்கா ரொய்ஷர், கார்லோ சொம்மறுகா ஆகியோர் சுவிஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்துவைத்தனர்.
ஏப்ரல் 13 ஆம் திகதி தொடக்கம் உண்ணாநிலை இருந்துவந்த கிருஸ்ணா அம்பலவாணர் ஏப்ரல் 15 ஆம் திகதி காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அவர் அங்கும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment