முகாம்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்கள்

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்து தென்மராட்சி மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் போது இவர்கள் உடுத்த உடையுடன் புறப்பட்டதாகவும் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களிடம் மாற்று உடைகள் அற்ற நிலைமை காணப்படுவதாகவும் முகாமுடன் தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
காலையில் இயற்கைக் கடன்களைக் கழிக்கக் கூடிய மலசல கூட வசதிகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும் காலையில் வழிபாடுகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகளும் அங்கில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உடைத் தேவையுடன் தலைக்கு எண்ணெய் உட்பட மற்றும் நாளாந்தப் பாவனைப் பொருட்களும் இன்றி பலத்த சிரமங்களுக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர். உறவினர்கள் பலர் இருந்தும் யாழ். குடா நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மக்களுடைய விபரங்கள் தெரியவில்லை. பலர் தமது உறவுகளைப் பற்றி அறிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதுவும் கை கூடவில்லை.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் தெரிந்தால், நண்பர்கள்-உறவினர் குறிப்பிட மக்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் பொது மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது.






0 விமர்சனங்கள்:
Post a Comment