இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் - பிரதமர்
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதனைப் போல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து மக்களும் தமது இன, மத, குல, மொழி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறினார்.
ஹொரணை ஸ்ரீ.ல.சு. கட்சி காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
கடந்த 30 வருடமாக வட கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த பயங்கரவாதத்தை அழித்து ஒழிக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்தக் கொடிய பயங்கர வாதத்தை ஒழிக்க தென்பகுதியிலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினர்.
அதேபோல் நாட்டின் அபிவிருத்தியிலும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். நாட்டின் யுத்தத்தின் போதும் நாட்டின் அபிவிருத்தியின் போதும் மாகாணசபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் பாரிய ஒத்துழைப்பை வழங்கின. அதேபோல் இவைகள் மத்திய அரசிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
வடக்கு யுத்தத்தை சுமார் 1/2 மணி நேரத்தில் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஆனால் அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் இந்த யுத்தம் மெது மெதுவாக நடைபெறுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment