அம்பலாவணன் மேற்குப் பிரதேசமும் படையினரின் பூரண கட்டுப்பாட்டில்: தேடுதலில் சடலங்கள், ஆயுதங்கள் மீட்பு
புதுக்குடியிருப்பு, அம்பலாவணன் மேற்குப் பகுதியிலமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பல அரண்களை இராணுவத்தினர் நேற்று (10) நிர்மூலமாக்கியதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தற்போது இந்தப் பிரதேசத்தின் கட்டுப்பாடு இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் புலிகளிடமிருந்து தப்பி வரும் சிவிலியன்கள் இந்தப் பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரிடமும் தஞச்மடையக் கூடியதாகவிருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் அங்கு நடத்திய தேடுதலின் போது புலிகளின் பதினொரு சடலங்களையும் பெருந்தொகை ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை நேற்று 600 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment