மெல்பேர்னில் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப வந்த புலிகளின் வாகனங்களைத் தாக்கி விரட்டிய சிங்களப்பெண்
புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி பலாத்காரமாக தடுத்து வைத்திருக்கும் பிரபாகரன் உடனடியாகத் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டுமெனத் தற்போது சர்வதேசமே அவரைக் கேட்கிறது.
இந்தநிலையில் எஞ்சியிருக்கும் தலைவர்களையும் தன்னையும் தன்னுடன் சேர்த்து ஆயிரத்துக்கு மிகக் குறைந்த தொகையினரான புலிகள் இயக்கத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துக்காகத்தான் தன் சொந்த மக்களையே பணயக் கைதிகளாக பிரபாகரன் பிடித்து வைத்துள்ளார். பிரபாகரனின் சிறிதேனும் மனிதாபிமானமற்ற இந்த பயங்கரவாத நடவடிக்கையைத் தற்போது உலகநாடுகள், ஐக்கிய நாடுகள் சபை முதலாக சர்வதேச அமைப்புகள், மனிதாபிமான அமைப்புகள் எல்லாமே கண்டித்துள்ளதும் மக்களை வெளியேற உடனே அனுமதிக்கும்படி பகிரங்கமாக பிரபாகரனைக் கோரிவருகின்றன. இதற்காக தற்போது உலக நாடுகளில் பிரபாகரனுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.
இவ்வாறு அண்மையில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரிலும் சிங்கள இனத்தவர்கள், தமிழர்கள் உட்படப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் மெல்பேர்னில் இயங்கும் புலிகள் இயக்கக் குழுவினர் புலிக்கொடிகளைப் பொருத்திய வாகனங்களில் தொடர்ச்சியாக வந்துள்ளனர். இந்த வாகனங்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்து வீதியில் "சிக்னல்' பகுதியொன்றில் நிறுத்தப்பட்டன.
சிக்னல் பகுதியில் இந்த வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்ட அதேவேளை ஆர்ப்பாட்டத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக மற்றுமொரு புலிகள் இயக்கக் குழுவினரின் வாகனங்களும் வேகமாக வந்து நின்றன. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இலங்கைப் பெண்மணி துணிந்து பாய்ந்து சென்று புலிகளின் ஆதரவாளர்களின் வாகனத்திலிருந்த பேனர் மற்றும் கொடிகளைப் பிடுங்கி எறிந்து வாகனத்தைத் தாக்கினார். இதனால் வாகனங்களில் வந்த புலிகள் இயக்க ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தைக் குழப்பும் திட்டம் நிறைவேறாமல் போனது. தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இதிலிருந்து தெரியவருவது யாதெனில் இதுகாலவரை அவுஸ்திரேலியாவில் இலங்கை மக்களை அச்சுறுத்தியும் ஆர்ப்பாட்டங்களில் மோதல்களை நடத்தியும் வந்த புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களினதும் வன்முறைகளை இனியும் அங்கு வாழும் தமிழர்கள் உட்பட சிங்கள இனத்தவர்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதே. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களும் குறிப்பிடும் படியான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
திவயின: வெளிநாட்டுத் தகவலும் விளக்கமும்.
Thinakural
0 விமர்சனங்கள்:
Post a Comment