அவுஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகைகளை எரிக்கும் படி அறிவிக்கும் புலிகளின் வானொலி
அண்மையில் அவுஸ்திரேலியாவில் விக்டோரியா நகரில் பாராளுமன்றக் கட்டிடத்தின் எதிரில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையரால் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் குழப்புவதற்காகத் திட்டமிட்ட அவுஸ்திரேலியாவில் வாழும் புலிகள் இயக்கத்தினரும் அவர்களுடைய ஆதவாளர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. அவுஸ்திரேலியாவில் ஸ்ரீலங்கா நாட்டவர்களின் ஆதரவைப் பெற்ற "ஸ்பர்' எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஸ்ரீலங்கா நாட்டவர் அமைப்பின் ஏற்பாட்டிலும் அவுஸ்திரேலியாவிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகம் மற்றும் இலங்கையர்களின் ஆதரவுடனுமே மேற்படி புலிகளுக்கு எதிரான மேற்படி ஆர்ப்பாட்டம் விக்டோரியாவில் நடத்தப்பட்டது.
இவ்வாறு இலங்கையர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப முடியாததாலும் அத்துடன் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றிவிட்டதாலும் ஆத்திரமடைந்த புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் அவுஸ்திரேலியாவில் ஸ்ரீலங்கா சிங்கள இனத்தவர்களின் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கூடுதலாக இருக்கும் மெல்போர்ண் பிரதேசத்தில் டென்டோங்க், கிளெமன், வோச்மன், நன்ரின்வேல் ஆகிய நகரங்களிலுள்ள சிங்கள இனத்தவர்களின் கடைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் மேற்படி புலிகளுக்கெதிரான விக்டோரியா ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிவிட்டு தாம் வாழ்கின்ற பகுதிகளை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்த சிங்கள இனத்தவர்கள் மற்றும் சில தமிழர்கள் மீதும் புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் பியர் போத்தல்களாலும் இருப்புக் கம்பிகளாலும் தாக்கியுள்ளனர். இது பற்றி விக்டோரியா பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டும் பொலிஸார் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் முன்னரே மேற்படி தமிழர் உட்பட சிங்கள இனத்தவர்களைத் தாக்கிய புலிகள் இயக்க ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவங்களிலிருந்து தெரியவருவது யாதெனில், அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிரான இலங்கை மக்களின் ஆர்ப்பாட்டத்தையோ வேறு எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளையோ தடுக்க அங்குள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்களால் இனிமேல் முடியாது என்பதே. இந்தக் குழுவினர் முக்கியமாக மெல்போர்ண் நகரத்திலேயே தங்கியிருக்கின்றனர். அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழர் வர்த்தக நிறுவனங்கள் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே மேற்படி புலிகள் இயக்க ஆதரவுக் குழுவினருக்கு அடங்கியவர்களாகவே உள்ளனர். பெரும்பாலும் இந்தத் தமிழர்கள் புலிகள் இயக்கக் குழுவினருக்குப் பயந்தே அவர்களுக்கு ஆதரவையும் நிதி உதவிகளையும் வழங்குகின்றனறே அன்றி விரும்பத்தின் பேரில் கொடுப்பதில்லை. இவ்வாறே அவுஸ்திரேலியாவில் வாழும் சிங்கள இனத்தவர்களும் புலிகள் இயக்கக் குழுவினருக்குப் பயந்தே வாழவேண்டிய நிலை முன்னர் இருந்தது. ஆனால் தற்போது அண்மையில் விக்டோரியாவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையான இலங்கையர்கள் துணிந்து திரண்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய புலிகளின் குழுவினரால் எதுவும் செய்யமுடியவில்லை. தொடர்ந்து அங்கு வாழும் சிங்கள இனத்தவர்களையும் புலிகளுக்கு எதிரான தமிழர்களையும் தம்முடைய பயமுறுத்தல்களுக்கு அடிபணிய வைக்கமுடியாது என்பதையே அண்மையில் வெற்றிகரமாக இலங்கையர்களால் நடத்திமுடிக்கப்பட்ட விக்டோரியா ஆர்ப்பாட்டம் எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருவது அவுஸ்திரேலியாவில் நெடுங்காலமாக இயங்குவதும் தற்போது பலம்வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பாக உயர்ந்துள்ளதுமான "ஸ்பர்' எனப்படும் இலங்கையர்களின் அமைப்பாகும்.
இவ்வாறு"ஸ்பர்' மற்றும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இயங்கிவரும் இலங்கையர்களால் ஏற்பாடுசெய்யப்படும் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களில் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குபற்றிவருகின்றனர். இந்த வகையில் அண்மையில் புலிகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்திருக்கும் பிரபலமான ஒரு நபரே அவுஸ்திரேலியாவில் வெளியாகும் "உதயம்' செய்திப் பத்திரிகையின் ஆசிரியரான நொயெல் நடேசன் ஆவார். இவர் அண்மையில் நடைபெற்ற புலிகள் இயக்கத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டிலும் பங்குபற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவுஸ்திரேலிய புலிகள் இயக்கக் குழுவினர் இவருடைய பத்திரிகையை எரிக்கும்படி அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறு பாலசிங்கம் பிரபாகரன் என்ற பிரபலமான புலிகள் இயக்க நபரே அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழர்களுக்கு அறிவித்துள்ளார். இவர் அவுஸ்திரேலியாவில் தமிழ் மாநிலம் என்ற பெயரில் தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடத்திவரும் அதன் தலைவராவார்.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவில் அண்மைக்கால நிகழ்வுகள் அங்கு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும், குழுவினரினதும் பலம் குறைந்துவிட்டதேயே காட்டுகிறது. படுதோல்வியடைந்து பிரதேசங்களில் எல்லாம் இருந்து இறுதியாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத்தின் பலம்வாய்ந்த நகரமாக கருதப்பட்ட புதுக்குடியிருப்பு நகரத்தையும் இழந்து பிரபாகரன் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டதை தாங்க முடியாமலே புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள், முகவர்கள், ஆதரவாளர்கள் தற்போது குமுறிக்கொண்டிருக்கின்றனர்.
திவயின 7/4/2009: வெளிநாட்டுத் தகவலும் விமர்சனமும்
Thinakural
0 விமர்சனங்கள்:
Post a Comment