வடபகுதி மக்களுக்கு செழிப்பான புத்தாண்டு
பல வருடங்களுக்குப் பின் யாழ் ப்பாணக் குடாநாட்டு மக்கள் சித்திரைப் புத்தாண்டை மகிழ் ச்சியுடனும் சிறப்பாகவும் கொண் டாடப் போகின்றார்கள். புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சூழ்நிலை கடந்த காலங்களில் இருக்கவில்லை.
தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததற்குப் பின்னர் மக்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. அத்தி யாவசிய பொருட்களுக்கான தட்டுப்பா டும் அப் பொருட்களைக் கட்டுப்படியான விலையில் வாங்க முடியாமையும் அப் பாதிப்புகளுள் பிரதானமானவை.
இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அத் தியாவசிய பொருட்களை வடபகுதிக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிரமம் ஒரு காரணம். புலிகள் எல்லாப் பொருட்களுக் கும் வரி அறவிட்டமை மற்றைய கார ணம். இன்று நிலைமை முற்றாக மாறி விட்டது.
போதுமான அளவு உணவுப் பொருட் களை அரசாங்கம் ஏ-9 பாதைக்கூடாக அனு ப்பியிருக்கின்றது. எதிர்வரும் நாட்களிலும் அனுப்பவிருக்கின்றது. இப்போது யாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. கூடுதலான விலை கொடுத்து அவற்றை வாங்க வேண் டியதில்லை.
இவற்றை விட குளிர்பானம் போன்ற ஏனைய பொருட்களையும் வட க்குக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருக்கின்றது. பதின்மூன்று தனியார் கம்பனிகள் இப் பொருட்களை ஏ-9 பாதையூடாக நேற்று எடுத்துச் சென் றன.
புதுவருடப் பிறப்பை அண்டிய காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் நுகர் பொரு ட்களுக்குத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றும் எல்லாப் பொருட்களையும் மக் கள் நியாயமான விலையில் வாங்கக்கூடிய தாக இருக்க வேண்டும் என்றும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கண்டி ப்பான உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
புத்தாண்டை வடபகுதி மக்கள் சிறப் பாகக் கொண்டாடப் போகின்றார்கள் எனக் கூறும்போது அந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவ டிக்கையில் படையினர் அடைந்த வெற்றி யின் விளைவாக ஏ-9 பாதை திறக்கப் பட்டதே இதற்குக் காரணம். வடபகுதி மக்களின் செழிப்பான வாழ்வு ஏ-9 பாதை யில் பெருமளவில் தங்கியிருக்கின்றதென் பதை மறுக்க முடியாது. ஏ-9 பாதைக் கூடான போக்குவரத்து தடைப்பட்டதும் அங்கே பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டது. விலைகள் அதிகரித்தன. இப் போது இப்பாதையூடாகப் பொருட்கள் அனுப்பப்படும் நிலையில் தட்டுப்பாடு நீங் கியதோடு சாதாரண விலையில் பொருட் களை வாங்கக் கூடியதாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தின் உற்பத்திப் பொருட்களு க்குக் கொழும்பு பிரதான சந்தையாக விள ங்கியது. புலிகள் ஈழப் போரை ஆரம்பி த்ததைத் தொடர்ந்து இந்தச் சந்தை வசதியை யாழ்ப்பாண மக்கள் இழக்க நேர்ந்தது. இதனால் யாழ்ப்பாண விவசாயிகளும் ஏனைய உற்பத்தியாளர்களும் தங்கள் வழமையான வருமானத்தை இழந்தனர். மீண்டும் அவர் கள் தங்கள் வருமானத்தைப் பெறுவதற் கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டிருக்கி ன்றது. ஏ-9 பாதை திறந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு வருகின்றன.
புத்தாண்டு வடபகுதி மக்களுக்குச் செழிப் பாக அமையவுள்ளது என்ற கூற்றின் உள் ளார்ந்த அர்த்தம் புத்தாண்டின் சிறப்புக்கு அப்பாலும் விரிகின்றது. யாழ்ப்பாண மக்களின் சமூக, பொருளாதார வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் குறியீடே புத்தா ண்டின் சிறப்பு. இந்த மாற்றம் இனப் பிரச்சினையின் தீர்வுக்காக நாம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறையையும் கோடிட்டுக் காட்டுகின்றது.
தனிநாட்டுக்கான போராட்டத்தின் விளை வாகவே மக்கள் பல்வேறு பாதிப்புகளு க்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இந்தத் தவ றான பாதையைக் கைவிட்டு அரசியல் தீர்வுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை அண்மைய மாற்றங்கள் வலி யுறுத்துகின்றன.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment