டான் தமிழ்ஒளி Hotbird சட்டலைற்றில் ஒளிபரப்பைத் தொடங்கியது.
கடந்த பல மாதங்களாக கொழும்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் யூரோபேர்ட் சட்டலைற் மூலம் ஒளிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தற்போது ஹொட்பேர்ட் (Hotbird: 13* East) சட்டலைற் ஊடாக தனது ஒளிபரப்பை ஆரம்பித்திருக்கிறது.
கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒளி பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றபோதிலும் அது யூரோபேர்ட் சட்டலைற் ஊடாக ஒளிபரப்பாகி வருவதால் பலர் அதனை பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ஏனைய அனைத்து தமிழ்த் தொலைக்கட்சிகளும் ஹொட்பேர்ட் சட்டலைற்றிலேயே ஒளிபரப்பாவதால் பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மாத்திரமே பார்க்க முடிந்தது. இதனால் பலர் டான் தமிழ்ஒளியை பார்க்க முடியாமல் இருந்துவந்தது.
Hotbird: 11623 V, Symbol Rate: 27500, FEC: 3/4
0 விமர்சனங்கள்:
Post a Comment