தன்னை மறந்து சிரித்ததால் தொண்டையில் சிக்கிய கத்தரிக்கோல்
4 அங்குல சிறிய கத்தரிக்கோலை விழுங்கிய நிலையில் நபரொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விநோத சம்பவம் சீனாவின் புரியன் நகரில் இடம்பெற்றுள்ளது.
கோங் லின் (27 வயது) என்ற இந்த நபர் உணவு உண்ட பின் பல் ஈறுகளுக்கிடையில் சிக்கியிருந்த உணவை அகற்ற மேற்படி கத்தரிக்கோலை உபயோகித்துள்ளார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் நகைச்சுவை கதை யொன்றைக் கூற தன்னை மறந்து சிரித்த கோங் லின், தவறுதலாக கையிலிருந்த கத்தரிக்கோலை விழுங்கியுள்ளார். கத்தரிக்கோல் தொண்டையில் சிக்கிக்கொள்ள வலியால் துடித்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந் நிலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் 30 நிமிட அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டு கோங் லின்னின் தொண் டையில் சிக்கியிருந்த கத்தரிக்கோலை அகற்றினர்.
மேற்படி சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான மருத்துவ கலாநிதி சென் வெயி விபரிக்கையில், தனது தொழில் அனுபவத்தில் மிகவும் விநோதமான ஒரு சத்திர சிகிச்சையாக
இது அமைந்ததாகக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment