புதுக்குடியிருப்பு மோதலில் சார்ள்ஸ் அன்ரனி பிரிவின் தலைவர் உட்பட இருவர் பலி
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அந்தனி படைப் பிரிவினை வழி நடத்திச் செல்லும் அமுதாப் என்பவரும் இந்த அணியின் முன்னாள் தலைவரான கோபித் என்பவரும் இராணுவத்தினருடன் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோதலின்போது கொல்லப்பட்டதாக இராணுவ ஊடக நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆனந்தபுரம் பிரதேசத்தை படையினர் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட பலத்த மோதலின்போது புலிகள் தரப்பில் 31 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment