இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்களை இந்திய அரசு இப்போதுதான் கொடுக்க தொடங்கியிருக்கிறது
சுரேஷ் பிரேமசந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவிப்பு
தமிழகத்திலிருந்து தமிழன்
இலங்கை அரசுக்கு ராஜதந்திர ரீதியில் கொடுக்க வேண்டிய அழுத்தங்களை இப்போதுதான் இந்திய அரசு கொடுக்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறோம்.
ஆனால் இலங்கை அரசு இத்தகைய அழுத்தங்களுக்கு செவிமடுப்பதாக தெரியவில்லை. எனவே இலங்கை அரசுக்கு நன்றாக விளங்கக் கூடிய வகையில் அழுத்தங்களை கொடுக்கும் பாணியை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறோம். இலங்கை அரசு செவிசாய்க்காவிட்டால் இந்திய அரசு அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக் கையை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்தி ரன் கூறியுள்ளார்.
டில்லி சென்று இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகி யோரை சந்தித்து பேசிய பின்னர் சென்னை திரும்பிய இவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
சுரேஷ்பிரேமச்சந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு; கே: டில்லிப் பயணத்தின்போது இந்தியப் பிரதமரையும் சந்திக்கும் வாய்ப்புண்டு என்று தெரிவித்திருந்தீர்கள். ஏன் அச்சந்திப்பு நிகழவில்லை?
ப:பிரதமர் மன்மோகன்சிங் தேர்தல் பிரச் சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அவர் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருப்பதால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் எங்களது டில்லிப் பயணத்தின்போது இந்திய வெளி யறவுச் செயலரையும், பாதுகாப்பு ஆலோகரையும் சந்திக்க வேண்டும் என்கிற நோக்கம் நிறைவேறியமை திருப்தியளிக்கிறது.
கே: அச்சந்திப்பு சாதகமான ஒன்றாக அமைந்திருந்ததா?
ப: நாங்கள் டில்லி சென்றதன் முக்கிய நோக்கமே, முல்லைத்தீவுப் பகுதியில் குறுகிய நிலப்பரப்பிற்குள் சிக்கியுள்ள இரண்டரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படும் பகுதியிலும்கூட மக்கள் மிக மோசமான முறையில் கொல்லப்படுகிறார் கள். தின?ம் ஐம்பது, நூறு பேர் பலியாகி வந்த நிலை மாறி, அது விரைவில் ஆயிரம், இரண் டாயிரமாக உயர்ந்துவிடும் அபாயத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய அரசாங்கத்தின் உயரதிகா?களுடன் பேசி, அத்தகைய படுகொலைகளை நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம்.
அந்த அடிப்படையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இருவரையும் சந்தித்துப் பேசினோம். இது ஒரு விரிவான சந்திப்பு என்றே கூறவேண்டும். இலங்கை அரசு முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை அம்மக்களுக்கு எதிராகப் பயன் படுத்துகிறது. இதை இந்திய அரசுத் தரப்புக்கு தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
மேலும் அம்மக்கள் எவ்வாறெல்லாம் மோமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை யும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நாங்கள் இந்தியா வருவதற்கு முன்புவ ரையில் சுமார் 4500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதைப்போல் இரண்டு மடங்கு மக்கள் படுகாயமடைந்திருக் கிறார்கள்.
இலங்கை அரசாங்கம் தொடர்நது இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவார்கள்.
இதையும் எங்கள் சந்திப்பின்போது இருவரிடமும் விளக்கினோம்.
கே: சந்திப்பின்போது போர் நிறுத்தம் குறித்து என்ன பேசினீர்கள்?
ப: இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? உடனடியாக இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இந்த ?டிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுதான் முக்கியமானது, முதன்மையானது.
இதை அழுத்தமாக வலியுறுத்தினோம். யுத்த நிறுத்தத்திற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். டில்லி செல்வதற்கு முன்பும், டில்லி யிலும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறோம்.
சிவ்சங்கர் மேனன், நாராயணன் ஆகியோ ருடன் பேசியதன் விளைவாக இந்திய வெளி யுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கொல்கத் தாவிலிருந்து நேரடியாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் இலங்கை அரசு யுத்த நிறுத்தத்தைக் கட்டாயம் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை சாதகமான அம்சமாகக் கருதுகிறோம்.
கே: இப்படிப்பட்ட அறிவுறுத்தல்கள் அல்லது வேண்டுகோள்களைப் பலமுறை இந்திய அரசு சார்பாக பலர் விடுத்திருக்கி றார்கள். அமைச்சர் பிரணாப் அறிக்கையும் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வாய்ப் புள்ளதே?
ப:இம்முறை அவர் விடுத்திருக்கும் அறிக் கையை வழக்கமான ஒன்றாகக் கருத முடியாது.
இலங்கை அரசு சிங்களப் புத்தாண்டையொட்டி அறிவித்த யுத்த நிறுத்தம் "கட்டாயம்' தொடரப்பட வேண்டும் என்று பிரணாப் குறிப்பிட்டுள்ளார். இந்தக் 'கட்டாயம்' என்ற வார்த்தையை நீங்கள் கவனிக்க வேண்டும்.
இதை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் இலங்கையில் நடைபெறும் மனிதப் படுகொலைகளை இந்தியாவால் ஏற்க முடி யாது என்றும் தம் அறிக்கையில் அவர் கூறியுள் ளார். மூன்றாவதாக விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி, அப்பாவி மக்களை கொன் றொழிக்கக் கூடாது என்றும் அவர் அழுத்த மாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்திய அரசு இப்போதுதான் இலங்கை அரசிடம் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேணடும் வலுவான முறையில் வலியுறுத்திருக்கிறது.
கே: அப்படியானால் உங்களது டில்லிப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதாகக் கருதலாமா?
ப: அப்படிச் சொல்வதற்கில்லை. பிரணாப் முகர்ஜியின் அறிக்கை வெளியான வகையில் எங்கள் பயணம் ஓரளவு வெற்றி பெற்றிருப் பதாகக் கூறலாம். அதேவேளையில், இந்திய அரசு இவ்வாறு கூறியிருப்பதை அங்கு இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்பதில்தான் எங்களது முழு வெற்றியும் அடங்கியுள்ளது. இல்லையெனில் இந்திய அரசின் இந்த அறிவுறுத்தல் வெறும் அறிக்கையாகப் போய்விடும். எனவே தான் எங்கள் தரப்பு நியாயங்களை இந்திய அரசிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். யுத்த நிறுத்தம் குறித்து இந்தியா கூறியுள்ள கருத்துக் களை இலங்கை அரசு நடைமுறைப்படுத் துவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தற்போது ஐ.நா. சபை தொடங்கி, இங் கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க செனட் சபை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் இலங்கை அரசுக்கு யுத்தத்தை நிறுத்தம்படி அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கே: புதுடில்லியில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினீர்களா?
ப: முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா வில் வெளியுறவு விவகாரங்களுக்கான செயற் குழுவின் தலைவரும், இலங்கைக்கான முன் னாள் இந்தியத் தூதருமான ஜா அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சிவ்சங்கர் மேனன், நாராயணன் ஆகிய இருவரிடம் தெரிவித்த அதே விவரங்களை இவரிடமும் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இலங்கை விவகாரத்தில் அத்வானிக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார் ஜா. நாங்கள் அவரிடம் தெரிவித்த விவரங்களை உடனடியாக அத்வானி யின் கவனத்திற்குக் கொண்டு சொல்வதாக அவர் உறுதி அளித்தார்.
கே: ஒட்டுமொத்தத்தில் உங்கள் டில்லி பயணத்திற்குப் பிறகு இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய அரசின் அணுகுமுறை யில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கருதுகிறீர் களா?
ப: ராஜதந்திர ரிதியில் இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்களை இப்போது தான் இந்திய அரசு தொடங்கியிருப்பதாகக் கருதுகிறோம். ஆனால் இலங்கை அரசு இத்தகைய அழுத்தங்களுக்கு செவிமடுப் பதாகத் தெரியவில்லை. எனவே இலங்கை அரசுக்கு நன்றாக விளங்கக்கூடிய வகையில் இந்த அழுத்தங்களைத் தரும் பாணியை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறோம். இலங்கை அரசு செவிசாய்க்கா விட்டால் இந்திய அரசு அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியவரும்.
கே: தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசும் திட்டம் இருக்கிறதா?
ப: இதுவரையில் இல்லை. இதுகுறித்து நாங் கள் கூடிப்பேசி விவாதித்து முடிவெடுப்போம்.
கே: இலங்கையில் யுத்தம் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத் தில் கடந்த ஆறு நாட்களாக ஈடுபட்டிருக்கி றார்கள். அவர்களைச் சந்தித்தீர்களா?
ப: சனிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினோம். அவர்களிடம் இலங்கை தமிழ் மக்களது அவலங்களை எடுத்துச் சொன்னோம்.
யுத்தத்தை நிறுத்துவதற்கான அவர்களது போராட்டத்தையும், அர்ப்பணிப்பு உணர்வை யும் அன்பையும் வரவேற்றோம்.
கே: தமிழகத்தில் நடைபெற்ற உள்ள தேர்தலில் இலங்கைப் பிரச்சினை தாக் கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?
ப:என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவி னுடைய தேர்தல் என்பது இந்திய இறையாண் மைக்கு உட்பட்ட விஷயம். இங்குள்ள அரசுக்கு ஆதரவு தருவதும், தராமல் போவதும் இந் நாட்டு மக்களின் இறைணாண்மைக்கு உட்பட்ட விஷயம். இதுகுறித்து கருத்து கூறுவது தேவை யற்றது. அதற்கான சூழலும் ஏற்படவில்லை.
கே: மீண்டும் டில்லிக்குச் செல்லும் திட்டம் உங்களிடம் உள்ளதா?
ப: நிச்சயமாக செல்வோம். இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவடைந்த பிறகு நாங்கள் மீண்டும் டில்லி செல்வோம்.
அந்தப் பயணத்தின்போதும் இந்திய அரஉயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வோம். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட இலங்கைத் தமிழ் மக்களது நலனில் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அங்கு எங்கள் மக்கள் நிம்மதியாக வாழ்வதையும், அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுப்பதை உறுதி செய்வதும், எங்களுடைய கடமை யெனக் கருதுகிறோம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment