பாடகராக மாறியுள்ள மரணதண்டனை கைதி
இந்தோனேசியாவில் தொடர் படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதியொருவர், "எனது கடைசி செயல் நிறைவேற்றம்' என்ற தலைப்பில் தன்னால் பாடப்பட்ட பொப் இசைப் பாடல்களை இம்மாதம் வெளியிடவுள்ளார்.
ஒரு தாயையும் அவரது கைக்குழந்தையையும் படுகொலை செய்தமை உள்ளடங்கலாக தொடர் கொலைகளைப் புரிந்தமை, முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் தன்னின சேர்க்கையில் ஈடுபடும் பழக்கத்தைக் கொண்டிருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் வெர்றி இதாம் ஹென்யென்ஸியாஹ் (31 வயது) மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிறையிலிருந்தவாறு கடந்த பெப்ரவரி மாதம் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டதன் மூலம், ரேயன் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் வெர்றி இதாம் பிரபலம் பெற்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment