எஞ்சியுள்ளோரையும் மீட்டுத்தருமாறு மக்கள் கதறல்
பாதுகாப்பு வலயத்தில் புலிகளிடம் எஞ்சியுள்ள குறுகிய பிரதேசத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் கனரக தாக்கு தல்களை தவிர்த்த வண்ணம் முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர்,
அங்கு சிக்கியுள்ள சின்னஞ்சிறார்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்ளை பாதுகாப்பாக மீட்டெடுப்பதில் மிகவும் கூடிய கரிசனை காட்டி வருகின்றனர்.மனிதாபிமான நடவடிக்கையிலும், பாரிய மீட்புப் பணியிலும் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் இந்த மக்களுக்குத் தேவையான உச்ச கட்ட வசதிகளை அவ்வப்போது உடனுக்குடன் செய்து கொடுப்பதை புது மாத்தளன் பிரதேசத்தில் காணக் கூடியதாக இருந்தது.
பாதுகாப்பு வலயத்தில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்க ளில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளையும், குண்டுகளையும் மீட்டெடுத்துக் கொண்டி ருக்கும் அதேசமயம், அங்குள்ள ஏதாவது ஒரு வழியை பயன்படுத்தித் தப்பிவரும் பொது மக்களையும் வரவேற்றெடுக்க படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய மீட்பு நடவடிக்கை கடந்த 20 ஆம் திகதி அதிகாலை மேற் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அங்குள்ள நிலைமை களைக் காண்பிக்கும் வகையில் ஊடகவியளாளர் குழுவொன்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் அழைத்துச் செல் லப்பட்டது.
சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மாதக் கணக்காக கூடாரங்களிலும், காட்டுப் பகுதிகளி லும் உணவு, நீராட வசதிகளின்றி சிக்கித் தவித்துக் கொண் டிருந்த இந்த அப்பாவி மக்கள் படையினரை நோக்கி வந்த வுடன் “வாருங்கள், வாருங்கள்”…. என வர வேற்கும் இராணுவத்தினர் உணவுகள், குடிபானங்களை வழங்குவதுடன், நீராட வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.
பாலைவனம் போன்று காட்சியளிக்கும் இந்தப் பகுதிக்கு படையினர் பவுசர்கள் மூலம் நீரினை கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து பாரிய தாங்கிகளில் நிரப்ப அங்குள்ள சின்னஞ் சிறார்களும், பெண்களும், ஆண்களும் சந்தோசமாக குளித்து மகிழ்வதை காணக் கூடியதாக இருந்தது.
படையினரை நோக்கி சாரி சாரியாக வந்து கொண்டிருக்கும் மக்கள் வரவேற்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உணவு வழங்கப்படுகிறது. பின்னர் தற்காலிகமான ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
உயிரை பணயம் வைத்துக் கொண்டு தங்களது குழந்தைகளையும், சின்னஞ் சிறார்களையும் சிரமத்திற்கு மத்தியில் அழைத்து வரும் மக்கள் தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகளையும் எடுத்துவர மறக்கவில்லை.
“நாங்கள் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புப் படையினரு க்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்; எம்மை பாதுகாப்பாக மீட்டெடுத்தது போன்று எஞ்சியுள்ள எமது மற்றைய சகோதரர்களையும் மீட்டெடுத்துத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க படையினரை நோக்கி வந்து கொண்டிருந்த தாய் ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் படையினர் எமக்கு மறக்க முடியாத உதவியை செய்துள்ளனர். இவர்கள் தற்பொழுது எம்முடன் நடந்து கொள்ளும் விதம் இதுவரை புலிகள், படையினரையும் தென் பகுதியினரையும் பற்றித் தவறான தகவல்களையே கூறியுள்ளனர் என்பதை காண்பிக்கிறது என்று மற்றுமொருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்பில் விமானம் மூலம் அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் சமைத்த உணவுகள், பால், உலர் உணவுகள் இவர்களுக்கு அவ்வப்போது உரிய முறையில் விநியோகிக்கப்படுகிறது.எந்தவொரு கனரக ஆயுதங்களையும் பாவிக்காமல் இந்தப் பாரிய மீட்பு நடவடிக்கையை நாங்கள் முன்னெடு த்தோம். இதனால், புலிகளின் பாரிய தாக்குதல்களுக்கு எமது படை வீரர்கள் முகம் கொடுக்க நேரிட்டது என்று தனது அனுபவங்களை 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுமார் மூன்று கிலோ மீற்றர் நீளத்தில் பத்தடி உயரத்தில் புலிகள் அமைந்திருந்த பாரிய மண் அணையை கைப்பற்ற சுமார் அரை மணி நேரம் எமக்கு எடுத்தது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றக் கிடைத்தமை எமது படைப் பிரிவுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாக கருதுவதாகவும் அவர் குறிப் பிட்டார். சகல நிலைகளிலும் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டே திட்டங்கள் தீட்டப்படுவதாகவும், படை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு வலயத்தின் தென் பகுதியிலிருந்து அம்பல வான் பொக்கனை பிரதேசத்திலுள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளை நோக்கி புலிகள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிவரத் தயாராக உள்ள பொது மக்களைப் பின்வாங்கச் செய்து வருகின்றனர். தற்பொழுது சிவில் உடைகளிலேயே புலிகள் மோதல் களில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்காக அமை த்துக் கொடுக்கப்பட்டுள்ள கூடாரங்களில் மறைந்துள்ள புலிகள், சிறிய துவாரமிட்டு அதன் ஊடாகப் படையினரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகங்களையும் சினைப்பர் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் அதே சமயம், வெகு விரைவில் எஞ்சியுள்ள குறுகிய பிதேசத்தையும் மீட்டெடுப்போமென்றும் பிரிகேடியர் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக் காரவும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment