இலங்கை வருகிறார் யசூசி அகாசி
இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் சூழ்நிலையில் அகாசி இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.
அதேநேரம், இலங்கைக்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி, மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், போர்நிறுத்தத்துக்கான அவசியம் இல்லையெனக் குறிப்பிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையெனவும் பதிலளித்துள்ளது.
மனிதநேயப் பணியாளர்களை அனுமதிக்கும் விடயத்தில் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருப்பதாகப் பிரித்தானியாவும், பிரான்சும் அறிவித்திருந்தன.
இதேவேளை, பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கை வரவிருந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை. எனினும், சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியைத் தாம் நிராகரிக்கவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெளிவுபடுத்தியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment