சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் குழந்தையை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் குழந்தையை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சவூதி அரேபியாவில் அமைந்துள்ள இலங்கைத் து}தரகத்தின் ஊடாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் ஐந்து வயதுக் குழந்தையை அந்தப் பெண்ணின் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment