புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறிவரும் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
“தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன” எனப் பெயர்குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரியொருவர் கூறியிருப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவப் பேச்சாளர் உடனடியாக கருத்துத் தெரிவிக்காவிட்டாலும், மேலும் இரண்டு இராணுவ வட்டாரங்கள் இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment