மாட்டின் கலங்களுடன் கலப்பிறப்பாக்கம் செய்து இறந்த சிறுமியை மீள உருவாக்க முடியும்


மனிதமிருக மூலவுயிர்க் கல கலப்பிறப்பாக்க (குளோனிங்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அண்மையில் கார் விபத்தில் இறந்த 10 வயது சிறுமியொருவரை தன்னால் மீள உருவாக்க முடியும் என சர்ச்சைக்குரிய பிரித்தானிய மருத்துவர் பனயியோ ரிஸ் சாவோஸ் அறி வித்துள்ளார்.
தான் அண்மையில் இறந்த காடி என்ற மேற்படி சிறுமியின் குருதிக் கலங்களையும் மாடொன்றின் கரு முட்டையையும் இணைத்து மனிதமிருக மூலவுயிர்க்கலத்தை உருவாக்கியுள்ளதாகவும் அச்சு அசலாக காடியை ஒத்த குழந்தையொன்றை தன்னால் உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
பரிசோதனைக் குழாயைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உறைநிலையில் பேணப்பட்டுள்ள இந்த மனிதமிருக மூலவுயிர்க் கலத்தை வெற்று மனித முட்டையில் பதித்து இரட்டை கலப்பிறப்பாக்க செயன் முறையொன்றுக்கு உட்படுத்த முடியும் என அவர் கூறினார்.
இந்நிலையில் அமெரிக்கப் பிரஜையான காடியின் தாயார் மேற்படி கலப் பிறப்பாக்க செயன்முறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரித்தானியா உள்ளடங்கலான உலக நாடுகள் பலவற்றில் மனித கலப்பிறப்பாக்க செயன்முறையானது சட்டவிரோதமானதாகும்.
அதே சமயம் இதற்கு முன் நான்கு பெண்களின் கருப்பைத் தோல் கலங்களிலிருந்து கலப்பிறப்பாக்கம் மூலம் 14 மூலவுயிர்க் கலங்களை வெற்றிகரமாக உருவாக்கியதாக தெரிவித்த சாவோஸ், எனினும் அம்மூலவுயிர்க் கலங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் எதுவும் பிரசவிக்கப்படவில்லை என்று கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment