தனி ஈழம் அமைப்பதாக இருந்தால் வேறு இடம் தேடிக்கொள்ளுங்கள்: இலங்கையில் இடம் கிடையாது: கோதபய ராஜபக்சே
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன், ராணுவம் நடத்தும் போர் பற்றி, அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, சமீபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர, தனி ஈழம் அமைப்பதுதான் நல்லது என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, இலங்கையின் ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் தம்பியுமான கோதபய ராஜபக்சே கூறியதாவது:
இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியாது. தனி ஈழம் அமைப்பதாக இருந்தால், அதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கை தீவு அதற்குரிய இடம் அல்ல. விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனக்கும் வருத்தம் அளிக்கிறது.
இதை நாங்கள் உணருகிறோம். என்றாலும், இதை பயன்படுத்தி, தீவிரவாதிகளுக்கு புத்துயிர் கொடுக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதை ஏற்பதற்கு இல்லை.இந்த தீவிரவாதிகள் எங்கள் நாட்டை மோசமாக சேதப்படுத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்களை கொன்று இருக்கிறார்கள். அவர்கள் அறிவித்து இருக்கும் போர் நிறுத்தத்தை ஏற்பதற்கு இல்லை. இவ்வாறு கோதபய ராஜபக்சே கூறியதாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
நக்கிரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment