முகாம்களின் நிலைமைகள் மிகவும் மோசம்: யூ.என்.எச்.சி.ஆர்
முகாம்களில் கூடுதல் எண்ணிக்கையான மக்கள் தங்கவைக்கப் பட்டிருப்பதால் முகாம்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகவுள்ளது என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ் தானிகராலயம் தெரிவித்துள்ளது.
“முகாம்களின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து இருப்பது மனித நேயப் பணிகளை முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்தியுள்ளது” என யூ.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் வில்லியன் ஸ்பின்ட்லர் கூறினார்.
இடம் பெயர்ந்த மக்கள் தங்குவதற்குக் கூடாரங்கள் இன்று கொழுத்தும் வெய்யிலில் வெளிகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் மக்கள் தாக்கப்பட்டதாகவும் கூறினார். “பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்” என ஸ்பின்ட்லர் தெரிவித்தார்.
அதேநேரம், பொதுமக்களின் உனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மேலதிகமான வழங்களை வழங்கவேண்டும் எனவும் யூ.என்.எச்.சீ.ஆர். இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்கான பொதுக் கட்டடங்கள், காணிகள் போன்றவற்றை வழங்கவேண்டுமென அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கென யூ.என்.எச்.சீ.ஆர். முதற்கட்டமாக டுபாயிலிருந்து 3000 தற்காலிக கூடாரங்களையும், 103 மற்றிக்தொன் உணவுப் பொருள்களும் நேற்று விமானம்மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதற்கென மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் அன்டோனியோ கட்டெரஸ் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment