விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டும் : ப.சிதம்பரம்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ஆங்கில தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டு மென்றும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,”இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர்,பாதிக்கப் பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும்.
நான் எதையும் யூகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்கவில்லை.” என்று ப.சிதம்பரம் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment