விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையில் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்:கருணா அம்மான்
இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப் படக் கூடாது என அமைச்சர் கருணா தெரிவித் துள்ளார்.
சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை மேற்கொண்டுள்ள தாகவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.பல்வேறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருணா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவருக்கு இலங்கையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பின்னர் இந்தியாவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து தப்பித்து காட்டுப் பகுதிகளுக்கு சென்றிருக்கக் கூடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment