மன்மோகனை சந்திக்க த.தே.கூ டெல்லி பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக த.தே.கூ. நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியொன் றில் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமரை கூட்டமைப்பினர் சந்திக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக வெளி யான தகவல்கள் தவறானவை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ""டில்லிக்குச் சென்று இந்திய வெளிவிவகார அமைச்சர், அத்துறை செயலாளர், இயலுமானால் பிரதமர் ஆகி யோரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு நாங் கள்தான் கேட்டிருந்தோம். இதற்கிணங்க பிரதமரை சந் திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.அதன் அடிப்படையில் வரும் 15ஆம் திகதி டில்லிக்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள். இதுதான் உண்மையே தவிர, டில்லியிலிருந்து அழைப்பு வந்து நாங்கள் போகாமல் இல்லை.
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் டில்லிக்குச் சென்று இந்திய அரசின் முக்கியமான அதிகாரிகளைச் சந்தித்துப் பேச இருக்கிறோம். இந்தியப் பிரதமரைச் சந் திக்கவும் விருப்பம் கொண்டுள்ளோம். அதில் எந்தவித மான மாற்றமும் இல்லை'' என்றார்.
தமிழகத்திலிருந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி - இங்கே அழுத்தவும்
0 விமர்சனங்கள்:
Post a Comment