பிரபாகரன் சரணடையவேண்டும் அன்றேல் தற்கொலை செய்ய வேண்டும் - தயா மாஸ்டர்
ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைய புலிகளின் தலைவர் பிரபாகரன் தயாரில்லையென்றால், அவர் செய்ய வேண்டிய ஒரே மாற்றுவழி சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதேயாகும் என்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர்கள் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் புலிகளின் தலைவருக்கு மூன்று மாற்றுவழிகள் இருந்தன. அதாவது ஆயுததத்தை கீழே வைத்துவிட்டு சரணடைதல், சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளல் அல்லது அப்பாவி தமிழர்களை தொடர்ந்தும் துயரத்தில் ஆழ்த்தாது தப்பிச்செல்ல விடுதல் என்பனவாகும். எவ்வாறாயினும் புலிகளின் அமைப்பு பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். ஆதலால் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாடுகளின் அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
கடைசி நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல புலிகளின் தலைவர் கருதினால் அது ஒருபோதும் சாத்தியப்படாது என புலிகளின் ஊடகப் பேச்சாளராகவிருந்த தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் செய்ய வேண்டிது, தான் சிறைப்படுத்தியுள்ள அப்பாவி மக்கள் பற்றி பொறுப்புடன் சிந்தித்து அவர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் துயரங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைவதேயாகும் என்று ஜோர்ஜ் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற ஏனைய புலித் தலைமைகளும் உறுப்பினர்களும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடையுமாறும் அவர்கள் கேட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களை சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்குமென ஜோர்ஜ் மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment