இறுதிச் சந்தர்ப்பம்
வன்னியில் தங்கள் கட்டுப்பா ட்டிலிருந்த நிலப்பரப்பு முழு வதையும் படையினரிடம் இழ ந்த புலிகள் இப்போது பாது காப்பு வலயத்துக்குள் சென்றிருக்கின்றார் கள். மோதலில் சம்பந்தப்படாத சிவிலிய ன்கள் மோதலால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசாங்கத்தினால் பிரகடன ப்படுத்தப்பட்டதே இப் பாதுகாப்பு வல யம். ஏற்கனவே புலிகள் இப் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்று படையினருக்கு எதி ரான மோதல் நடவடிக்கையில் ஈடுபட்ட தால் சிவிலியன்கள் பெரிதும் பாதிக்கப்ப ட்டனர்.
இப்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் உட்பட எஞ்சியுள்ள அனை வரும் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்று தங்கள் பாதுகாப்புக்காகச் சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்து வது அச் சிவிலியன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.
பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் சென் றிருப்பது யுத்தத்தில் இனியும் தாக்குப்பி டிக்க முடியாது என்ற நிலையில் தோல் வியை ஒப்புக்கொண்டதற்குச் சமன். இந்த நிலையில் மக்களைத் துன்பத்தில் ஆழ்த் தாமல் சரணடைவது தான் அவர்களுக்கு முன்னாலுள்ள ஒரே வழி. மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் விதமாகச் செயற்படுவது மக் களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்குச் சமன் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின் றோம்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல் வதையே அங்குள்ள சிவிலியன்கள் விரும் புகின்றார்கள். ஆனால் அவர்கள் வெளி யேறப் புலிகள் விடுகின்றார்களில்லை. தடையை மீறி வெளியேறியவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பல சம்பவங்கள் கடந்த நாட்களில் இடம் பெற்றிருக்கின்றன. இத் துப்பாக்கிப் பிர யோகத்தில் சிலர் இறந்திருக்கின்றார்கள். பலர் காயமடைந்திருக்கின்றார்கள்.
அரச படையினர் இப்போது பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்திருக்கின்றனர். உடனடியாகப் புலிகள் சரணடைய வேண் டும் என்றும் சிவிலியன்கள் வெளியேறுவ தற்கு இடமளிக்க வேண்டும் என்றும் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்துக் கொண்டி ருக்கின்றனர். ஆனால் புலிகள் தங்கள் இறு க்கமான நிலைப்பாட்டைக் கைவிட்டதா கத் தெரியவில்லை. அவர்கள் சரணடைவ தற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சிவிலியன்களை வெளியேற விடாமல் தடுப்பதில் இப்போது தீவிரமாக இருப் பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
புலிகள் யுத்தத்தில் தோற்றுப்போனார் கள். அரச படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்கள் சரணடைய மறுத்தால் கைப்பற்றப்படுவதோ அழிக்க ப்ப டுவதோ நிச்சயம். அது இடம்பெறு வதைச் சில தினங்களுக்குத் தள்ளிப் போட லாமேயொழிய தவிர்க்க முடியாது. தமிழ் நாட்டிலும் ஐரோப்பாவின் சில நாடுக ளிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவர முடியும் என்று புலிகள் நினைப்பார்களேயானால் அது வெறும் கற்பனை. யுத்தநிறுத்தத்து க்கு அரசாங்கம் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்பதைப் புலிகள் விளங் கிக்கொண்டு செயற்படுவது தான் நல் லது. அவர்களுக்கு மாத்திரமன்றி மக்களு க்கும் அதுவே நன்மை பயக்கும்.
மக்களை மனிதக் கேடயங்களாகப் புலி கள் பயன்படுத்துகின்றார்கள். தங்கள் உயி ரைப் பாதுகாப்பதற்காக மக்களின் உயி ரைப் பணயம் வைக்கும் செயலாகவே இதைக் கருத வேண்டும். மக்களுக்கா கவே ஆயுதம் ஏந்தியதாகக் கூறும் புலி கள் அந்த ஆயுதத்தை மக்களின் அழிவுக் காகப் பயன்படுத்தக் கூடாது. மக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு இது இறுதிச் சந்தர்ப்பம். மக்களின் அழிவைத் தவிர்ப்ப தற்காகச் சரணடைவதற்குப் புலிகள் இப் போது முன்வர வேண்டும். இல்லாவிட் டால் வரலாறு அவர்களை மன்னிக்காது.
Thinakaran






0 விமர்சனங்கள்:
Post a Comment